திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கணபதி. இவரது மனைவி சங்கரி ( 52) . இவர் மேலாரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார் .
இந்நிலையில், நேற்று (மே.21) மதியம், சங்கரி துணிகளைக் காயவைப்பதற்காக வீட்டிற்குப் பின்புறமுள்ள தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது , அப்பகுதியில் வீசிய சூறைக்காற்றால் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் வயரை எதிர்பாராத விதமாக அவர் மிதித்துவிட்டார்.
இதில் மின்சாரம் தாக்கி சங்கரி தூக்கி வீசப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கணவர் கணபதி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சங்கரியை மீட்டு உடனடியாக கலசப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சங்கரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர் .
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கலசப்பாக்கம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர் .