திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதிகளில் கத்திரி வெயில் முடிந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்த வேளையில், வானில் சூரியனைச்சுற்றி திடீரென சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த வட்ட வடிவிலான ராட்சத வானவில், சூரியனைச் சுற்றி பிரகாசித்துக் கொண்டிருந்தது.
சூரியனைச் சுற்றி காணப்படும் வட்டத்தை சிறுவர்கள் கண்டு ரசிக்கும் காட்சி இதனைக் கண்ட அப்பகுதியில் வசிக்கும் முன் அனுபவம் உள்ள வயதானவர்கள், அதிக அளவில் மழை வருவதற்கான அறிகுறி என்றும்; நீண்ட நாட்களுக்குப் பிறகு இது போன்று அதிசயமான சூரிய ஒளி தோன்றியிருக்கிறது எனவும் தெரிவித்தனர். மேலும் இயற்கைப் பேரிடர்கள் இருக்கும் சூழலில் திடீரென வானத்தில் ஒளி வட்டம் தோன்றியதால், பொதுமக்கள் அச்சம் அடைந்ததோடு, பார்ப்பதற்கு விசித்திரமாகவும், புதிதாகவும் இருந்ததாக அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.இதையும் படிங்க: மும்பை மக்களே உஷார்