திருவண்ணாமலை மாவட்டம் புது வாணியங்குளம் தெருவை சேர்ந்தவர் லியாகத் அலி. இவர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சோலா என்ற தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் வைத்துள்ளார். இந்த நிலையத்திற்கு நிலநீர் எடுப்பு சான்றிதழ் வாங்க லியாகத் அலி விண்ணத்திருந்தார்.
இதுசம்பந்தமாக திருவண்ணாமலை நிலநீர் பிரிவு அதிகாரி சிந்தனைவளவன் செப்.23ஆம் தேதி அன்று கள ஆய்வு செய்து அனுமதி பெற்று தர ரூ.9,00,000 லட்சம் முதலில் கேட்டு பின்னர் ரூ.3,00,000 லட்சத்திற்கு பேரம் பேசியுள்ளார். இதில் விருப்பம் இல்லாத லியாகத் அலி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திருவேல் முருகனிடம் புகார் அளித்துள்ளார்.
அதன்பின் அந்த தொகையில் முன்பணமாக ரூ.50,000 கொடுப்பதாக கூறி சிந்தனைவளவனை அழைக்குமாறு லியாகத் அலி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி சிந்தனைவளவன் பணம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிப்பட்டார். அதன்பின் அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ஈரோட்டில் மல்லிகை பூ விலை கடும் சரிவு