ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுக்கா, வாழப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி மகன் ரகுபதி (36).
இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் மேல்சீசமங்கலம் கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.
இங்கு பாசன வசதிக்காக ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள 3எச்பி மின் மோட்டார், ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள ஆயில் என்ஜின் ஆகியவற்றை நிறுவியுள்ளார்.
இது அண்மையில் திருடுபோனது. இது தொடர்பாக ரகுபதி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராவணன், சந்துரு, முத்துக்குமரன், வினோத் ஆகியோர் இந்தத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், அவர்களிடமிருந்த திருடப்பட்ட 3எச்பி மின் மோட்டார், ஆயில் என்ஜின் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 'திருட எதுவுமில்லை' - மீன் குழம்பை சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் மட்டையான திருடன்!