ETV Bharat / state

கள்ள சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்ஐ உட்பட ஐந்து போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம்! - காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன்

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்ஐ உட்பட ஐந்து போலீசாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 24, 2023, 6:21 PM IST

திருவண்ணாமலை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 'கார்த்திகேயன்' உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச் சாராய மது விற்பனையை தடுக்க தவறிய காவல் துறையினர் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தீவிர விசாரணை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் கள்ளச்சாராய விற்பனை குறித்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலும், கள்ளச்சாராய விற்பனை குறித்து தகவல்கள் கிடைத்தும் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய போலீசார் மீது பாரபட்சம் இன்றி நடவடிக் மேற்கொண்டார்.

இதையும் படிங்க: Tamil Nadu Govt: தமிழ்நாட்டில் குட்கா, பான் மசலாவுக்கு மேலும் ஓராண்டுக்கு தடை!

அந்த வகையில் கண்ணமங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்ஐ அருள், தானிப்பாடி காவல் நிலைய தலைமை காவலர்கள் யூஜின் நிர்மல், சிவா, கீழ் கொடுங்கலூர் காவல் நிலைய தலைமை காவலர் ஹரி மற்றும் செங்கம் காவல் நிலைய தலைமை காவலர் சோலை ஆகியோர் பணி இடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் நேற்று (மே 23) வரை கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டதாக சுமார் 270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள சாராய விற்பனையை தடுக்க தவறிய எஸ்ஐ உட்பட ஐந்து போலீசாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கையால் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்ததால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அண்மையில் தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் பாரில் விற்கப்பட்ட மதுவை வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர். அந்த மதுவில் சயனைடு உட்பொருட்கள் இருந்ததாக புகார எழுந்த நிலையில் அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: அயன் பட பாணியில் உள்ளாடையில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்.. பலே கில்லாடி சிக்கியது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.