திருவண்ணாமலை : கர்நாடக மாநிலம் பெங்களூரில் மைசூர் ரோட்டில் உள்ள ஆர்ஆர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீ நாகேஷ். ஓய்வுபெற்ற பொறியாளர். இவரது மனைவி மாலா பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு வைஷ்ணவி மற்றும் வருதுனி(22) என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஸ்ரீ நாகேஷ் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள நித்தியானந்தரின் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்துள்ளனர். இதனிடையில் ஸ்ரீ நாகேஷ் அவர் மனைவி மூத்த மகள் மட்டும் ஆசிரமத்திலிருந்து வெளியேறிவிட்டனர். ஆனால், இளைய மகள் வருதுனி மட்டும் ஆசிரமத்திலேயே தங்கி வந்துள்ளார்.
இதனிடையே ஆசிரமத்தில் சென்று தன் மகளை தன்னுடன் அனுப்பும்படி நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் பெங்களூர் உள்ள ஆசிரமத்தில் இருந்து வருதுனியை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக ஆசிரம நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் வருதுனியின் தந்தை ஸ்ரீ நாகேஷ் வந்து பார்த்தபோது அவர் உள்ளே இருப்பதை கண்டுள்ளார்.
ஆனால், ஆசிரமத்தில் உள்ள நிர்வாகிகள் அவரது மகள் இங்கே இல்லை என்று கூறியதையடுத்து தனது மகளை எவ்வாறு நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து மீட்க செயவதறியால் திகைத்துள்ளார். எனவே, நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சிக்கியுள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு திருவண்ணாமலை கிராமிய காவல்நிலையத்தில் ஸ்ரீ நாகேஷ் நேற்று (ஜூன்26) புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் கிராமிய காவல்நிலைய காவல்துறையினர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விரைவில் நித்தியானந்தா ரீஎன்ட்ரீ..! சமாதி முடியப்போகுதாம்-கைலாசா அப்டேட்