ETV Bharat / state

காவல் துறையை கண்டித்து கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை முயற்சி! - குடும்பத்துடன் போராட்டம்

திருவண்ணாமலை: இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் விசாரணைக்கு அழைத்து வந்தவர்களை காவல் உதவி ஆய்வாளர் அடித்ததால், அவரது குடும்பத்தினர் தேசிய நெடுஞ்சாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா போராட்டத்தில் தற்கொலை முயற்சி
தர்ணா போராட்டத்தில் தற்கொலை முயற்சி
author img

By

Published : Sep 20, 2020, 1:19 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் துரிஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது குடும்பத்தினருக்கும், எதிர் வீட்டுகாரர் ரவி என்பவரது குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, திருப்பதி கடந்த செப் 15ஆம் தேதியன்று மேல்செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் செப்.18ஆம் தேதி ரவி, திருப்பதி மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனடியாக விசாரணைக்காக திருப்பதி மற்றும் அவரது மகன், மகள், பேத்தி, மருமகன் உள்ளிட்டோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். மேல்செங்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் தங்கராசு திருப்பதி மகன் ஆனந்த் மற்றும் பேத்தியை அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து திருப்பதியின் மகள் கவிதா என்பவர் ஒருதலைப்பட்சமாக காவல் துறையினர் நடந்து கொள்வதாகவும், தனது தம்பி, மகளை காவல் துறையினர் அடித்ததாகவும் கூறி, நீதி வேண்டும் என காவல் நிலையம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கைக்குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: மோடி பிறந்தநாள் விழாவில் தீப்பொறி பட்டு பலூன்கள் வெடித்து விபத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.