ETV Bharat / state

'திராவிட கட்சிகளை அழிப்பதற்கு எந்த கொம்பனும் பிறக்கவில்லை' - எ.வ. வேலு!

author img

By

Published : Mar 21, 2021, 11:56 AM IST

திருவண்ணாமலை: திராவிட கட்சிகளை அழிப்பதற்குத் தமிழ்நாட்டில் எந்தவொரு கொம்பனும் பிறக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்

minister
மாஜி அமைச்சர் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நேற்றிரவு(மார்ச்.20) நடைபெற்றது. இதில் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கு. பிச்சாண்டி வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து பேசிய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு, "கீழ்பென்னாத்தூரில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெளி மாவட்டத்திலிருந்து இறக்குமதி செய்துள்ளார்கள். பாமகவில் தகுதியான ஆட்களே கிடையாதா? டாக்டர் ராமதாஸ் இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒழிப்பதுதான் என்னுடைய முக்கிய வேலை என்று சொன்னவர் இப்போது திராவிடம் ஒட்டியுள்ள அதிமுகவுடன்தான் கூட்டணியை வைத்துள்ளார்.

திராவிட கட்சி என்பது 100 ஆண்டு கால கட்சி. அதனை அழிப்பதற்கு தமிழ்நாட்டில் எந்த கொம்பனும் பிறக்கவில்லை. திராவிட கட்சி தோன்றியதால்தான் அடிமை வாழ்க்கை அகற்றப்பட்டு தன்மானத்தோடு தமிழன் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டம்

அதேபோல, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சருக்கான தகுதியற்றவர் என்றும், இவரை முதலமைச்சராகப் பெற்றது நம்முடைய தலையெழுத்து என்றும் மோசமாகப் பேசியவர் அன்புமணி. ஆனால், தற்போது இவர்தான் சிறந்த முதலமைச்சர். சிறந்த ஆட்சி நடக்கிறது என்று பேசிவருகிறார். அப்படிப்பட்ட ஒரு கட்சிக்கு வாக்களிப்பதைவிட, நல்லது செய்யும் திமுகவிற்கு வாக்களியுங்கள் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரப்புரையில் மீனவர்களுக்கான புதிய வாக்குறுதிகள் அளித்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.