ETV Bharat / state

ரூ. 31.20 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு - Thiruvannamalai At an estimated cost of Rs.31.20 crore   Citizenship Work

திருவண்ணாமலை: அரையாளம் பெரிய ஏரியில் ரூ. 31.20 கோடி மதிப்பீட்டில், 59 ஏரிகளில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
author img

By

Published : May 22, 2020, 6:02 PM IST

தமிழ்நாட்டில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பைச் சார்ந்த ஏரிகளை, அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ. 31.20 கோடி மதிப்பீட்டில், 59 ஏரிகளில் புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதன்மூலம் 6,034.81 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும். திருவண்ணாமலை மத்திய பெண்ணையாறு வடிநிலக் கோட்டம் மூலம் 54 ஏரிகள் ரூ. 28.89 கோடி மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம் கீழ் பாலாறு வடிநிலக் கோட்டம் மூலமாக வெம்பாக்கம் வட்டத்தில் 5 ஏரிகள் ரூ 2.31 கோடி மதிப்பீட்டிலும் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

குடிமராமத்து பணிகள், நீரினை பயன்படுத்தும் சங்கங்கள் மூலமாக, நியமன முறையில், விவசாயிகளின் 10 விழுக்காடு பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுக்கவும், தண்ணீரினை சேமித்து பாசன உறுதி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், அரையாளம் பெரிய ஏரியில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு மூலம் 2020-2021ஆம் ஆண்டில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 67 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: செங்குணம் பெரிய ஏரியில் குடிமராமத்துப் பணிகள் தொடக்கம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.