ETV Bharat / state

ஊழியர்களின் அலட்சியத்தால் கரோனா நோயாளி உயிரிழப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு! - கரோனா நோயாளி

திருவண்ணாமலை: மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்தது மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய போக்கே காரணம் என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Escaped Corona Patient Died In Thiruvannamalai

author img

By

Published : Aug 9, 2020, 8:41 PM IST

திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தச் சேர்ந்தவர் வடிவேல் (45). அவருக்கு முனியம்மாள் என்ற மனைவியும், 18 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். வடிவேலு கடந்த வியாழக்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் அனுமதித்து சிசிச்சை அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, அவரது மனைவி, மகள், மகன் ஆகிய மூவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 8) இரவு அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தப்பி, தனது வீட்டிற்கு வந்துள்ளார். இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததால், ஏற்கனவே மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தனது கிராமம் அருகே படுத்து உறங்கிய நிலையில் உயிரிழந்தார். இன்று (ஆகஸ்ட் 9) காலை அவ்வழியாக வந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஊழியர்களின் அலட்சிய போக்கால் கரோனா நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றது அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.