திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்பது ஒன்றியங்களுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
குறிப்பாக செங்கம் ஒன்றியத்திற்குள்பட்ட 44 பஞ்சாயத்துகளில் சுமார் 220 வாக்குச்சாவடி மையங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் பணியில் ஆயிரத்து 813 அலுவலர்கள் ஈடுபட்டனர்.
செங்கம் ஊராட்சிக்குள்பட்ட புதிய குயலம், சென்னசமுத்திரம், காயம்பட்டு, மண்மலை ஆகிய வாக்குச்சாவடிகளில் காலை 7 மணி முதலே மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் வரிசையில் நின்று ஆர்வத்துடன் அவர்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
இதையும் படிங்க: