ETV Bharat / state

உஷார்..! தெருவில் சுற்றினால் இனி ஈகிள் டீம் கொத்திடும்... - உஷார்..! தெருவில் சுற்றினால் இனி ஈகிள் டீம் கொத்திடும்

திருவண்ணாமலை: ஊரடங்கை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் தேவையின்றி ஊரக உள்புற சாலைகளில் சுற்றும் இளைஞர்களை கட்டுப்படுத்த ஈகிள் டீம் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

eagle patrol vehicles to control public gatherings in tiruvannamalai tp protect from corona
உஷார்..! தெருவில் சுற்றினால் இனி ஈகிள் டீம் கொத்திடும்...
author img

By

Published : Apr 2, 2020, 9:34 AM IST

மாவட்டத்தில் நகர்புறம், கிராம புறங்களில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் உள்புற சாலைகளில் தேவையின்றி இளைஞர்கள் நடமாடுவதையும், கடை வீதி, பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தடுக்கும் பொருட்டும் ஈகிள் டீம் அமைக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி தெரிவித்தார்.

மாவட்டத்தில் ஏற்கனவே காவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 30 இருசக்கர காவல் ரோந்து வாகனங்களுடன் தமிழ்நாடு அரசால் தற்போது கூடுதலாக ஒதுக்கப்பட்ட 20 புதிய இருசக்கர காவல் ரோந்து வாகனங்களையும் இணைத்து 50 இருசக்கர காவல் ரோந்து வாகனங்கள் கரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் சிறப்பு ரோந்து பணியை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்ரவர்த்தி தொடங்கி வைத்தார்.

eagle patrol vehicles to control public gatherings in tiruvannamalai tp protect from corona
உஷார்..! தெருவில் சுற்றினால் இனி ஈகிள் டீம் கொத்திடும்...

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில் "பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் 95 சதவீதம் கட்டுபடுத்தப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்ணாணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், நகர்புற, கிராமப்புற உள்புற சாலைகளில் இளைஞர்கள் கட்டுப்பாடின்றி சுற்றுவதால் கரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. அதை கட்டுபடுத்த, தடுக்க ஈகிள் டீம் அமைக்கப்பட்டு 50 இருசக்கர வாகனங்களில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

இந்த வாகணங்களில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளதால் வாகனம் செல்லும் இடங்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு தேவையின்றி சுற்றுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முழுமையான ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க முடியும்.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி

ஆகவே, தயவு செய்து பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வராமல் கரோனா வைரஸ் பரவலை தடுக்க உதவவேண்டும்" என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.