ETV Bharat / state

சுடுகாட்டுக்குச்செல்ல பாலம் இல்லை: மார்பளவு நீரில் சடலத்தை தூக்கிச்சென்ற அவலம் - சடலத்தை கொண்டு ஆற்றை கடந்து செல்லும் அவலம்

படைவீடு அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதியின்றி மார்பளவு ஆற்று வெள்ளத்தில் சடலத்தைச் சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் அரங்கேறியுள்ளது.

படைவீடு அருகே சுடுகாட்டுக்கு பாலம் இல்லாததால் ஆற்றில் கடந்த அவலம்

author img

By

Published : Nov 20, 2022, 3:33 PM IST

திருவண்ணாமலை: ஆரணி அடுத்த படைவீடு ஊராட்சிக்குட்பட்ட ராமநாதபுரம் கொல்லைமேட்டில் வசித்தவர், பரசுராமன்(40). இவருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் யுவராஜ்(14) என்ற மகனும் சந்திரா என்ற மனைவியும்(35) உள்ளனர். முன்னதாக உடல்நலமின்றி இறந்துபோன பரசுராமன் உடலை அவரது உறவினர்கள் அருகில் உள்ள கமண்டல நதிக்கரையோரத்தில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய சுமந்து சென்றனர்.

அப்போது சமீப நாட்களாக பெய்த கனமழை காரணமாகவும், கமண்டல நதியில் செண்பகத்தோப்பு அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காரணமாகவும் கழுத்தளவு தண்ணீரில் கடுமையான சூழலில் ஆற்று நீரில் மெதுவாக நடந்து சடலத்தைக் கொண்டுசென்றனர்.

ஆற்றைக் கடக்க முடியாத பலர் மறுகரையிலேயே நின்றுவிட்டனர். அப்பகுதியில் கமண்டல ஆற்றைக்கடந்து சுமார் ஐந்து கிராம பொதுமக்கள் செல்வதால் மழைக்காலங்களில் ஆபத்தான நிலையில் ஆற்று வெள்ளத்தில் நீந்தி பொதுமக்கள் சென்றும்; பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

படைவீடு அருகே சுடுகாட்டுக்கு பாலம் இல்லாததால் ஆற்றில் கடந்த அவலம்

ஆபத்தைத் தவிர்க்க தமிழ்நாடு அரசுக்கு பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் மெத்தனமாகவே அலுவலர்கள் உள்ளனர் என்று குற்றம்சாட்டுகின்றனர். உடனே விரைந்து ஆற்றின் குறுக்கே சிறுபாலம் அமைத்து சாலை வசதிகளை ஏற்படுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம்; கோவையில் இருந்து புறப்பட்ட இரண்டாம் கட்ட ரயில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.