திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த ஆனந்தல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). இவரது மகன் சுப்பிரமணி (32). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் இருந்த தந்தை, மகன் இருவருக்கிடையே ஏற்பட்ட வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, போதை மயக்கத்தில் தனது தந்தையான மாணிக்கத்தை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் மயங்கிய நிலையில் கீழே விழுந்த மாணிக்கம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தவகலறித்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் காவல் துறையினர், சுப்பிரமணியை கைது செய்தனர். பெற்றெடுத்த தந்தையை மகனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வீட்டிலிருந்தபடியே மருத்துவ பரிசோதனை - கரோனாவைக் கட்டுப்படுத்தும் செயலி