ETV Bharat / state

திராவிட மாடல் அரசு தொடர்ந்து இலவசங்களை வழங்கும் - அமைச்சர் எ.வ.வேலு - திராவிட மாடல் ஆட்சி

தமிழ்நாட்டில் ஏழை மக்களின் பொருளாதாரம் மேன்மை அடைய திராவிட மாடல் அரசு தொடர்ந்து இலவசங்களை வழங்கும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்

ஏழை மக்கள் பொருளாதாரத்தில் மேம்பட திராவிட மாடல் அரசு தொடர்ந்து இலவசங்களை வழங்கும்

author img

By

Published : Sep 11, 2022, 12:51 PM IST

திருவண்ணாமலையில் நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி, இலவச தள்ளுவண்டி வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சட்டப் பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் 202 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ. 1 கோடியே 78 லட்சம் மதிப்பிலான இலவச தள்ளு வண்டிகள் வழங்கினார். அப்போது பேசிய எ.வ.வேலு, "திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு 28 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 4,619 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 39 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

திராவிட மாடல் அரசு தொடர்ந்து இலவசங்களை வழங்கும்

நாட்டில் பொருளாதாரம் சீராக இல்லை. ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. தமிழ்நாடு அரசு இலவசங்களை ஏழை எளிய மக்களுக்கு தாங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்காக தான் வழங்கிறது. ஒரு சிலர் இந்த இலவசங்கள் குறித்து கொச்சைப்படுத்தி வருகின்றனர். திராவிட மாடல் ஆட்சி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்ற தாழ்வுகளை சரி செய்வதற்காக தொடர்ந்து இலவசங்களை வழங்கும். எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில தடகளச் சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ‘கிரிவலப் பாதையில் பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது’ - அமைச்சர் எ.வ.வேலு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.