ETV Bharat / state

புகார் அளித்ததால் பொதுமக்களை மிரட்டிய நகராட்சி அலுவலர்! - நோய்கள் அவதி

திருவண்ணாமலை: குடியிருப்புப் பகுதிகளில் பொங்கிவழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்கள்  நகராட்சி ஆணையருக்கு புகார் மனு அளித்த காரணத்தால் சம்பந்தப்பட்ட அலுவலர் பொதுமக்களை மிரட்டியுள்ளனர்.

people struggling
author img

By

Published : Aug 30, 2019, 10:50 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் பெருமாள் நகர், மாரியம்மன் கோயில் கிழக்குத் தெருவின் நடுவே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி தூர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமம் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.

drainage overflow disease tiruvannamalai  people struggling  பாதாள சாக்கடை கழிவுநீர்  நோய்கள் அவதி  திருவண்ணமலை
சாலையின் நடுவே தேங்கியிருக்கும் கழிவுநீர்

இது குறித்து நகராட்சி சம்மந்தப்பட்ட அலுவலர் வள்ளி என்பவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் மர்மக் காய்ச்சல், தொண்டை அடைப்பான் நோய் வந்து உயிரிழந்துள்ளனர்.

drainage overflow disease tiruvannamalai  people struggling  பாதாள சாக்கடை கழிவுநீர்  நோய்கள் அவதி  திருவண்ணமலை
பொதுமக்கள் அவதி

இதனைத் தொடர்ந்து, தூர்நாற்றம் அதிகரித்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் தாங்கமுடியாமல் நன்றாக உணவு உண்ண முடியாமலும், தூங்க முடியாமலும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து, பல்வேறு நோய்கள் ஏற்பட்டு சிகிச்சை பெறுவதற்கு தனியார் மருத்துவமனையை நாட வேண்டி உள்ளது.

பொங்கிவழியும் பாதாள சாக்கடை

'தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. எங்களால் அந்த அளவுக்கு செலவு செய்யமுடியாத நிலைமை உள்ளதாக"அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Intro:குடியிருப்பு பகுதிகளில் பொங்கிவழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியுறும் அவலநிலை, கமிஷனருக்கு பொதுமக்கள் புகார் மனு அளித்த காரணத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி வள்ளி பொதுமக்களிடம் சென்று மிரட்டல்.Body:குடியிருப்பு பகுதிகளில் பொங்கிவழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியுறும் அவலநிலை, கமிஷனருக்கு பொதுமக்கள் புகார் மனு அளித்த காரணத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி வள்ளி பொதுமக்களிடம் சென்று மிரட்டல்.

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட பெருமாள் நகரில் மாரியம்மன் கோவில் கிழக்கு சந்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையின் நடுவே வெளியேறி துர்நாற்றத்தால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கழிவு நீர் வெளியேறுவதால் துர்நாற்றம் ஏற்படுவதால் அவர்களுக்கு ஏற்படும் அவதிகள் குறித்து நகராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரி வள்ளியிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகிறார்.

இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அவர்களிடமும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் மர்ம காய்ச்சல் மற்றும் தொண்டை அடைப்பான் நோய் வந்து இரண்டு நபர்கள் தற்போதுதான் மரணமடைந்த சம்பவம் அனைத்து அதிகாரிகளுக்கும் தெரியும்.

இருப்பினும் இது போன்ற நிகழ்வுகளை கண்டு கொள்ளாமல் இருப்பது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.

பல்வேறு இடங்களில் சாலையின் நடுவே இதுபோன்று கழிவுகள் வெளியேறி வருகின்ற காரணத்தால் துர்நாற்றம் வீசுகிறது.

பாதாள சாக்கடையின் வழியே செல்ல வேண்டிய கழிவு நீரானது வெளிப்புறக் கால்வாயில் திருப்பப்பட்டு இருப்பது துர்நாற்றம் வீசுவது அதிகரிப்பதற்கு மேலும் ஒரு காரணமாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.

இதனை குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தாங்கமுடியாமல் குழந்தைகளையும் குடும்பத்தையும் வைத்துக்கொண்டு தவித்து வருகின்றனர்.

இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் இந்த நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு தனியார் மருத்துவமனை நாட வேண்டி உள்ளதாகவும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் இதற்கு எங்களால் அந்த அளவுக்கு செலவு செய்யமுடியாத நிலைமை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக கமிஷனருக்கு பொதுமக்கள் புகார் மனு அளித்த காரணத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி வள்ளி பொதுமக்களிடம் சென்று மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

மாவட்ட ஆட்சித்தலைவர் இது சம்பந்தமாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Conclusion:குடியிருப்பு பகுதிகளில் பொங்கிவழியும் பாதாள சாக்கடை கழிவுநீர், துர்நாற்றம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியுறும் அவலநிலை, கமிஷனருக்கு பொதுமக்கள் புகார் மனு அளித்த காரணத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி வள்ளி பொதுமக்களிடம் சென்று மிரட்டல்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.