திருவண்ணாமலை: செங்கம் அடுத்த சிங்காரப்பேட்டை நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். 55 வயதாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கழுதை பால் விற்பனை செய்து வருகிறார். பசும்பால் ரூபாய் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்து வரும் நிலையில் கழுதை பால் லிட்டர் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.
வலிப்பு, ஆஸ்துமா, பூச்சிக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட கழுதை பால் காலை வேளையில் பெரும்பாலானோர் விரும்பி வாங்கி பருகுகின்றனர்.
"ஆறு மாத குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை இப்பாலை உட்கொள்ளுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் பெறுவதாகவும் பெரும் வியாதிகள் தாக்குவதில்லை எனவும் 50 மில்லி பால் 100 ரூபாய் விற்பனை செய்வதாகவும் இத்தொழிலில் 20 ஆண்டு காலமாக செய்து வருவதாகவும் கூறுகிறார் முருகேசன்"
மேலும் இதன் அருமை தெரிந்தவர்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து வாங்கி செல்வதாகவும் தானே பல இடங்களுக்கு கழுதையை ஓட்டிச் சென்று நேரடியாக விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார். படித்துவிட்டு வேலை இல்லை என்று ஊரை சுற்றிக் கொண்டு இருப்பவர்களை காட்டிலும் கழுதையை கேவலமாக நினைக்காமல் கழுதையை வைத்து மாதம் முப்பதாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
இதையும் படிங்க: கடும் குளிரில் நடுங்கும் அமெரிக்கா.. 2,270 விமான சேவை ரத்து..