திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், 18 ஒன்றியக் குழு தலைவர் உட்பட 898 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடந்தது. மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலர் அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது.
கலசப்பாக்கம் ஒன்றியத் தலைவர் பதவிக்கு திமுக வெற்றி பெற்றது என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். ஆனால் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் எத்தனை வாக்குகள் போடப்பட்டன என்பதை தங்களுக்குத் தெரிவிக்கவில்லை எனக் குற்றம்சாட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமியிடம் முற்றுகையிட்டனர். பின்னர் மனு ஒன்றையும் அவரிடம் அளித்தனர்.
இதையடுத்து, தேர்தல் அலுவலர் முடிவை அறிவித்துவிட்ட பிறகு அதை மாற்ற முடியாது என கந்தசாமி பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றார். மேலும், துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு ஒன்றியங்களில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் பெரும்பான்மையான 10 இடங்களில் திமுகவினரே வெற்றிவாகை சூடி உள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் பதவிகளில் திமுக வெற்றி