ETV Bharat / state

'ஊழல், அடிமை எடப்பாடி கூட்டத்தை வீழ்த்துவோம்' - காலி நாற்காலிகளைப் பார்த்து சூளுரைத்த ஸ்டாலின்

திருவண்ணாமலை: தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் ஊழல், அடிமை எடப்பாடி கூட்டத்தை வீழ்த்துவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்தார்.

stalin speech thiruvanamalai
author img

By

Published : Sep 16, 2019, 9:18 AM IST

Updated : Sep 16, 2019, 9:38 AM IST

திமுக சார்பில் திருவண்ணாமலை-திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் திடலில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், " மாநிலத்தை ஆளக்கூடிய ஊழல், அடிமை எடப்பாடி கூட்டத்தை வீழ்த்துவோம் என்று சபதத்தை ஏற்கக்கூடிய முப்பெரும் விழாவாக இது அமையும் என்றார்.

நாடு முழுமைக்கும் ஒரு மொழி அவசியம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்லுகிறார். அதுதான் இந்தியாவிற்கு அடையாளத்தைத் தரும், அதிக மக்களால் பேசக்கூடிய இந்தி மொழிதான் அந்த அடையாளத்திற்குரிய மொழி என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவில் மொத்தம் ஆயிரத்து 652 மொழிகள் பேசப்பட்டு வருகிறது. அதனால்தான் அன்றே பெரியார் சொன்னார், இது கலாசார படையெடுப்பு, இந்தி பேசுபவர்களின் நாகரிகம் வேறு, நம்முடைய நாகரிகம் வேறு என்று.

இந்தியைத் திணிக்கிற எந்த முயற்சியையும் திமுக பார்த்துக் கொண்டிருக்காது. அதைத் தடுக்கிற முயற்சியில்தான் உறுதியாக ஈடுபடும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்தி–யா? இந்தியாவா? எதை வேண்டும் என்று சொன்னால், இந்தியாதான் வேண்டும் என்று சொல்பவர்கள்நாங்கள். இது அரசியல் போராட்டம் அல்ல, இது பண்பாட்டுப் போராட்டம், மொழிப்போராட்டம், அரசியல் எல்லைகளை எல்லாம் கடந்து, அனைவரும் இணைந்து போராடுகிற போராட்டத்திலே பங்கேற்க வேண்டும்.

இதில் அரசியல் தலைவர்கள், ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் என அனைவரும் பங்குபெற வேண்டும்" என்றார்.

காலி நாற்காலிக்கு மத்தியில் உரையாற்றிய ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், டி ஆர் பாலு உதயநிதி ஸ்டாலின் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் பிரமாண்ட பந்தல் அமைத்திருந்தனர்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா

தமிழ்நாடு முழுவதும் இருந்து திமுக தொண்டர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்த்து 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் பிரமாண்ட பந்தல் அமைத்திருந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் பேச ஆரம்பித்ததும் தொண்டர்கள் பந்தலை விட்டு வெளியேறினர்.

20 ஆயிரம் பேர் அமரக்கூடிய பந்தலில் வெறும் 2 ஆயிரம் திமுக தொண்டர்கள்கூட இல்லாத நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் காலி நாற்காலிகளுக்கு மத்தியில் உரையாற்றினார்.

திமுக தலைமை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொள்ளாதது திமுக முக்கிய தலைவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:தமிழகத்தை ஆளும், ஊழல், அடிமை எடப்பாடி கூட்டத்தை வீழ்த்துவோம் என சபதத்தை ஏற்கும், முப்பெரும் விழாவாக இது அமையும் அன தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். 
Body:தமிழகத்தை ஆளும், ஊழல், அடிமை எடப்பாடி கூட்டத்தை வீழ்த்துவோம் என சபதத்தை ஏற்கும், முப்பெரும் விழாவாக இது அமையும் அன தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். 

திருவண்ணாமலையில் திமுக தலைமை கழகம் சார்பில் முப்பெரும் விழா திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

முப்பெரும் விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: 

மாநிலத்தை ஆளக்கூடிய ஊழல், அடிமை எடப்பாடி கூட்டத்தை வீழ்த்துவோம் என்று சபதத்தை ஏற்ககூடிய முப்பெரும் விழாவாக அமையும்.

அமித்ஷா என்ன சொல்லுகிறார். நாடு முழுமைக்கும் ஒரு மொழி அவசியம். அதுதான் இந்தியாவிற்கு அடையாளத்தை தரும், அதிக மக்களால் பேசக்கூடிய இந்தி மொழிதான், அந்த அடையாளத்திற்குரிய மொழி என்று அமித்ஷா அவர்கள் வெளியிட்டிருக்கிறார். இந்தியாவில் 1652 மொழிகள் பேசக்கூடியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான்  அன்றே பெரியார் சொன்னார், இது கலாச்சார படையெடுப்பு, இந்தி பேசுபவர்களின் நாகரிகம் வேறு, நம்முடைய நாகரிகம் வேறு. 

 இந்தியை திணக்கிற எந்த முயற்சியையும், தி.மு.க., பார்த்து கொண்டிருக்காது, அதை தடுக்கிற முயற்சியில்தான் உறுதியாக ஈடுபடும். அதற்காக எந்த தியாகத்திற்கும் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம்.  இந்தி போராட்டம் என்பது தமிழகத்தோடு முடிந்தவிடாது, இந்தி பேசாத மாநிலத்தவர்களையும் ஒன்று சேர்க்க கூடிய போராட்டமாக நிச்சயம் அமையும், இந்தி–யா, இந்தியாவா, என்று எதை வேண்டும் என்று சொன்னால், எங்களை பொறுத்தவரை இந்தியாதான் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள். ஆனால், அவர்கள் இந்திதான் வேண்டும் என்று சொல்பவர்கள் அவர்கள், இது அரசியல் போராட்டம் அல்ல, இது பண்பாட்டு போராட்டம், மொழிப்போராட்டம், அரசியல் எல்லைகளை எல்லாம் கடந்து, அனைவரும் இணைந்து போராடுகிற போராட்டத்திலே பங்கேற்க வேண்டும். தமிழர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள், ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டும். ஒற்றுமையுடன் மொழிப்போராட்டத்தை நடத்த தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

நிகழ்ச்சியில் 20000 பேர் அமரக்கூடிய அளவில் பிரம்மாண்ட பந்தல் அமைத்திருந்தனர்.

நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், டி ஆர் பாலு உதயநிதி ஸ்டாலின் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து திமுக தொண்டர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்த்து 20000 பேர் அமரக்கூடிய அளவில் பிரம்மாண்ட பந்தல் அமைத்து இருந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேச ஆரம்பித்ததும் தொண்டர்கள் தொடர்ந்து கூட்டம் நடைபெறும் பந்தலை விட்டும் வெளியேறினர்.

20000 பேர் அமரக்கூடிய பந்தலில் 2000 திமுக தொண்டர்கள் கூட இல்லாத நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் காலி நாற்காலி களுக்கு மத்தியில் உரையாற்றினார்.

திமுக தலைமை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொள்ளாதது திமுக முக்கிய தலைவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:தமிழகத்தை ஆளும், ஊழல், அடிமை எடப்பாடி கூட்டத்தை வீழ்த்துவோம் என சபதத்தை ஏற்கும், முப்பெரும் விழாவாக இது அமையும் அன தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். 
Last Updated : Sep 16, 2019, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.