உலகத் திறனாய்வுத் திட்டத்தின்கீழ், திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆறு முதல் எட்டாம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தனித்திறன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் (100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்) உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில் திருவண்ணாமலை, செங்கம், போளூர் ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களிலிருந்து மொத்தம் ஆயிரத்து 800 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த விளையாட்டுப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ மாணவிகளுக்குச் சான்றிதழ்களும், ரொக்கமும் வழங்கப்பட்டன. மேலும் இந்தத் தனித்திறன் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்று முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவ மாணவிகள் மண்டல அளவிலான போட்டிகளில் தகுதிபெறுவர்.
இதையும் படிங்க: ஸ்டாலின் கனவு பலிக்காது... மீண்டும் அதிமுகதான்' - பொள்ளாச்சி ஜெயராமன்