ETV Bharat / state

டிராக்டர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி: ஆட்சியர் தொடங்கிவைப்பு - மாவட்ட ஆட்சியர் கந்தசாமி

திருவண்ணாமலை: டிராக்டர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.

thiruvannamalai-collector-starting
thiruvannamalai-collector-starting
author img

By

Published : Mar 30, 2020, 7:16 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் நகராட்சிகள், பேரூராட்சிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் கருவி பொருத்தப்பட்ட டிராக்டர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார். அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் கலந்துகொண்டனர்.

டிராக்டர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி

பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர், "திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகள், 10 பேரூராட்சிகளில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக விவசாயிகளிடமிருந்து வாடகைக்குப் பெறப்பட்ட 60 டிராக்டர்களில் ரூ.2.50 கோடி மதிப்பில் கிருமிநாசினி தெளிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

அதன்மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் மூன்று நாள்களுக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்படும். ஏற்கனவே ஊராட்சிப் பகுதிகளில் 250 பேருந்துகள் மூலம் மூன்று நாள்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள்: வீதிதோறும் கிருமி நாசினி தெளிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.