ETV Bharat / state

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை எதிரொலி: வாகன சோதனை, விடுதிகளில் ஆய்வு செய்ய டிஜிபி உத்தரவு

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்ட தீவிர வாகன சோதனை செய்ய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு எதிரொலி: காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

author img

By

Published : Feb 12, 2023, 9:36 PM IST

சென்னை: திருவண்ணாமலை நகரப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெரு, தேனிமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய 4 இடங்களில் நள்ளிரவில் பாரத ஸ்டேட் வங்கி, ஒன்இந்தியா வங்கி ஏடிஎம்களில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரூ.75 லட்சம் வரை பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இதே போல் சென்னையில் நேற்று முன்தினம் நகைக்கடை ஒன்றில் 9 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டு கொள்ளையர்கள் ஆந்திரா தப்பிச்சென்றதால் அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை, திருவண்ணாமலையில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு கும்பலும் ஆந்திர மாநிலத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு எதிரொலியால், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்ட தீவிர வாகன சோதனை செய்ய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கொள்ளையர்கள் தமிழ்நாட்டிலேயே தங்கி உள்ளார்களா? என்பதை கண்டுபிடிக்கவும்; தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில எல்லைகள், சுங்கச் சாவடிகள் மற்றும் வாகனத் தணிக்கை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதேபோல் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்றை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தற்பொழுது அவர்கள் எங்கு உள்ளார்கள், அந்த கும்பல் கூட்டாளிகள் யாரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:"ராஜஸ்தான் மாநில வளர்ச்சிக்காக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை" - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.