ETV Bharat / state

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தின்போது மலையில் ஏற 2ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி! - கார்த்திகை தீப திருவிழா

கார்த்திகை தீபத்திருநாள் அன்று மகாதீபத்தின்போது மலையின் மீது ஏற 2ஆயிரம் நபர்களுக்கு அனுமதி என கார்த்திகை தீப ஆலோசனைக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கார்த்திகை  மகாதீபத்தின் போது மலையில் ஏற பக்தர்களுக்கு அனுமதி

author img

By

Published : Oct 28, 2022, 5:48 PM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் மிகவும் புகழ்பெற்றது, கார்த்திகை தீபத்திருவிழா. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் இன்றி, கார்த்திகை தீபம் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு பக்தர்களுடன் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் நவம்பர் 27ஆம் தேதி அண்ணாமலையார் கோயில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் திருக்கோயிலில் பரணி தீபமும் அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையின் மீது மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்த நிகழ்வைக்காண 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரும் நிலையில் பக்தர்களுக்குத்தேவையான குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்டவர்களை ஏற்படுத்தித்தரும் வகையில் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் கார்த்திகை தீபத்துக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித்தருவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை செய்தார்.

இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக, கார்த்திகை தீபத்தின்போது அண்ணாமலையார் மலையின் மீது பக்தர்கள் ஏறத்தடை விதித்த நிலையில், இந்த ஆண்டு மகா தீபத்தன்று 2,000 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மலையின் மீது ஏற பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தின்போது மலையில் ஏற 2ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!

இதுகுறித்து, கார்த்திகை தீப ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், இந்த ஆண்டு 2,000 நபர்களுக்கு மட்டுமே மலை ஏற அனுமதி என்று அறிவித்தார். மேலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை கொண்டு வரும் பக்தர்களிடம் இருந்து அவற்றைப்பறிமுதல் செய்து, அதற்குப் பதிலாக மஞ்சப்பை தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: கோயிலில் வணிக நோக்கத்தில் கடைகள் செயல்பட அனுமதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.