திருவண்ணாமலை மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளர் நிர்மலா தலைமையில், திருவண்ணாமலை மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினர், அதிவிரைவுப் படை காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர்.
அதில் வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வைப்பூர் கிராமம் அருகே உள்ள கரடிமலை அடிவாரத்தில் 1900 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 700 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் பன்னையூர் கிராமத்திற்கு வடமேற்கே உள்ள எடல் ஏரிக்கரையின் முள்புதரில் சுமார் 1650 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 400 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு, கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
மேலும் காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.