பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில் திருவண்ணாமலை ஊராட்சி செயலர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலை வேங்கிக்காளில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ”ஊராட்சி செயலர்கள் அனைவரும் தெருவிளக்குகளை பராமரிப்பதற்கும், குடிநீரை விநியோகிப்பது மட்டும்தான் அவர்களுடைய பொறுப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுகாதாரம் பற்றியும் ஊராட்சி செயலர்கள் கவனிக்கவேண்டும். நீர்த்தேக்க தொட்டிகளை சீரான கால இடைவெளிகளில் பிளிச்சிங் பவுடர் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
இந்தாண்டு டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகள்ளது. குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடிய அபாயம் உள்ளது. உச்சக்கட்டமாக டெங்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நிலையும் உள்ளது. மக்கள் மத்தியில் இவற்றைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஊராட்சி செயலர்களால் நிச்சயம் ஏற்படுத்த முடியும்.
அடுத்ததாக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், பாரத பிரதமரின் திட்டமல்ல; அது ஊராட்சி செயலர்களின் திட்டம். இந்த திட்டம் உங்கள் கையில்தான் உள்ளது. நீங்கள் நினைத்தால் பத்து பைசா வருமானம் இல்லாதவர்களுக்குக் கூட வீடு கட்டிக் கொடுக்கலாம். இந்த முயற்சியை நீங்கள் செய்ய வேண்டும். தயவுசெய்து உங்கள் கிராமத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.
நீங்கள் பதவியில் இருக்கும்போது எத்தனை குடும்பத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லமுடியும் என்ற எண்ணத்தோடு செயல்படுங்கள். நீங்கள் நிராகரித்த பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கு முயற்சி செய்தால் உங்களால் முடியும்” என்றார்.
இதையும் படிங்க: வேல பாப்பீங்களா சஸ்பெண்ட் செய்யவா? எச்சரித்த தி.மலை ஆட்சியர்... வரவேற்ற பொதுமக்கள்...!