திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், சுமார் 30க்கும் மேற்பட்டோர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது எனவும், இந்த வேளாண் சட்டத்திற்கு தமிழ்நாட்டில் அதிமுக அரசு துணை போவதாகவும் எனவே இந்தக் கருப்பு சட்டத்தை மத்திய அரசு மீண்டும் திரும்பப் பெற வேண்டி வலியுறுத்தியும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்! - வேளாண் திருத்தச்சட்டம்
திருவண்ணாமலை: வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.