ETV Bharat / state

வீட்டிற்குச் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தவர் மரணம் - Death on the bus to go home

திருவண்ணாமலை: வீட்டிற்குச் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தவர் இருக்கையில் அமர்ந்தவாறே மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Death on the bus to go home AT central bus stand tiruvannamalai

author img

By

Published : Mar 3, 2020, 6:23 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், குலால்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆலிவர் (50). இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்தார். நண்பகல் 3 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட இவர், திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து, தன் சொந்த ஊருக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறி அமர்ந்தார்.

அப்போது, பேருந்து இருக்கையில் அமர்ந்திருக்கும்போது அவரது உயிர் பிரிந்தது. இதைப்பார்த்த மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்து பேருந்தை விட்டு கீழே இறங்கினர். இந்த தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்குச் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தவர் உயிர் பிரிந்ததால் பரபரப்பு

பின்னர் இது இயற்கையான மரணம் என்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அவரது உடல் சொந்த கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் பேருந்து நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தீட்டை காரணம் காட்டி வீட்டிலிருந்து தனி அறைக்கு ஒதுக்கப்படும் பெண்கள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.