ETV Bharat / state

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பரிதாப மரணம்! - former death

திருவண்ணாமலை: ஆரணியில் பெய்த தொடர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

death
author img

By

Published : Aug 19, 2019, 5:22 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அம்மாவட்டத்திலுள்ள குளம் மற்றும் ஏரிகளில் நீர் நிலைகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆரணி அருகே உள்ள பையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன் என்பவர் வீட்டில் மின்வயரில் கசிவு ஏற்பட்டுள்ளது.

மின்கசிவு ஏற்பட்டு கூலித்தொழிலாளி மரணம்

இந்நிலையில், வீட்டில் மின்சாதனத்தை பயன்படுத்த முயன்றபோது மின்கசிவு ஏற்பட்டு வெங்கடேசன் மீது மின்சாரம் தாக்கி சம்பவடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் வெங்கடேசனை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து, இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை, ஆரணி அருகே மின் கசிவு ஏற்பட்டு தொழிலாளி பலி.Body:திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை, ஆரணி அருகே மின் கசிவு ஏற்பட்டு தொழிலாளி பலி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்திலுள்ள ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் தண்ணீர் அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பெய்த மழையால் விவசாயிகள் பயிரிட்டுள்ள மணிலா, மிளகாய் மற்றும் பூந்தோட்ட பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜமுனாமுத்தூர் மலையிலும் மழைநீர் வெள்ளம் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் 5.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஆரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் என்பவர் வீட்டில் மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

வீட்டில் மின்சாதனத்தை பயன்படுத்த முயன்ற போது மின்கசிவு ஏற்பட்டு வெங்கடேசன் என்பவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவடத்திலேயே வெங்கடேசன் பலியானார்.

அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது சம்மந்தமாக ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆரணி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக கனமழை, ஆரணி அருகே மின் கசிவு ஏற்பட்டு தொழிலாளி பலி.

ஆரணி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.