திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ( ஜூன் 2)வரை கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 444 ஆக இருந்தது. இன்று( ஜூன் 3) புதிதாக 21 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 146, இறந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உள்ளது.
சென்னையிலிருந்து வந்த 13 பேர், மும்பையில் இருந்து வந்த 5 பேர், உள்ளூர் தொற்று ஏற்பட்ட இருவர் உள்ளிட்ட 21 பேருக்கு இன்று மட்டும் கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம், போளூர், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் தலா 3 பேர், கலசப்பாக்கம் வட்டத்திலிருந்து இருவர், காட்டாம்பூண்டி வட்டத்தை சேர்ந்த நான்கு பேர், மங்கலம், செங்கம், பெருங்காட்டூர் வட்டத்திலிருந்து தலா ஒருவர் மற்றும் திருவண்ணாமலை நகராட்சியை சேர்ந்த இருவர் என மொத்தம் 21 பேர் நோய்தொற்று பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்திலேயே கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்டதில் சென்னை முதலிடத்தில் உள்ளது, 2 ம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டமும், அதனைத்தொடர்ந்து நான்காவது இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் ஒரே நாளில் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி - கரோனா உறுதி
திருவண்ணாமலை: மாவட்டத்தில் இன்று ( ஜூன் 3) ஒரே நாளில் மாவட்டத்தில் 21 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து எண்ணிக்கை 444 ல் இருந்து 465 ஆக உயர்ந்துள்ளது.