திண்டுக்கல்லில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா பரிசோதனை! - Corona second wave
திண்டுக்கல்: தேர்தல் ஆணைய உத்தரவுpபடி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது, வாக்கு எண்ணும் பணிகளுக்கான ஏற்பாடுகள் துரிதப்பட்டுள்ளன.
இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் 72 மணி நேரத்திற்குள் கண்டிப்பாக கரோனா தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்று உத்தரவு பிறப்பித்தனர்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தின், மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் மாவட்ட நிர்வாகத்தினர் சார்பிலும், சுகாதாரத் துறையினர் சார்பிலும், அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவுகள் நாளை தெரிவிக்கப்படும் எனவும் அதன் அடிப்படையிலேயே வாக்கு எண்ணிக்கை மையத்தில் செல்வதற்கான அடையாள அட்டை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனைக்கு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் ஆர்வத்துடன் வந்து பரிசோதனை செய்துகொண்டனர்.