திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் இது வரை 767 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய 767 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகளிலும் அருகில் உள்ள வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை தொடந்து கண்காணிக்கும் வகையிலும், அவர்களில் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்தவர்களை விழிப்போடு இருக்க அறிவுறுத்தும் வகையிலும், பொது சுகாதாரத் துறை நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மருத்துவர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் உள்ளிட்ட ஐந்து நபர்கள் அடங்கிய 33 குழுக்கள் அடங்கிய வாகனங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தக் குழுக்கள் மாவட்டத்தில் தனிமைப்படுத்தபட்ட 767 நபர்களை தொடந்து 14 நாள்கள் கண்காணிக்கும். எச்சரிக்கையை உதாசீனப்படுத்தி இவர்கள் வீடுகளை விட்டு வெளியில் மற்றவர்களுடன் சுற்றித் திறிந்தால் இவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் உள்ள தனிபிரிவில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா: சென்னையில் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!