திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஆக.15) ஒரே நாளில் 108 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால், மாவட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 622ஆக அதிகரித்துள்ளது.
இதில், சென்னை மற்றும் ஆந்திராவிலிருந்து வந்த தலா ஒருவர், புறநோயாளிகள் பிரிவில் இருந்து 29 பேர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 7 பேர், இரண்டாம் நிலை வைரஸ் தொற்று பெற்ற 4 பேர், முன் களப்பணியாளர் 3 பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட 63 பேர் உள்ளிட்ட 108 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,619 ஆகவும், சிகிச்சை பலனின்றி உயரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 118 ஆகவும் உள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இதுவரை 3,32,105 பேர் கரோனா தொற்றால் பாதிப்பு...!