கரோனா வைரஸ் காரணமாக, தமிழ்நாட்டில் பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட, இன்று(ஜூலை 18) ஒரே நாளில் 69 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 774ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 ஆயிரத்து 87 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 26 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா வைரஸ், பொதுமக்களிடையே அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.