இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வந்திருக்கிறது. அந்த தொகையை இரண்டு சுய உதவிக் குழுக்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கவேண்டும் சுய உதவிக் குழுக்களுக்கு செல்லவில்லை.
இந்தத் திட்டத்தின் மூலம் 15 கோடி ரூபாய் அளித்ததாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டதில் 72 கோடி ரூபாய் விவசாயிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நெசவுத் தொழில் செய்பவர்களுக்கு மானியம் வழங்க ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய் வருகிறது. இந்த தொகையானது நெசவுத் தொழில் செய்பவர்களுக்கு சென்றடையவில்லை. மாறாக நெசவுத் தொழிலில் ஈடுபடாதவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் தடுக்காமல் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ஏன் மவுனமாக உள்ளது என்ற சந்தேகம் இருக்கிறது.

இந்த ஊழலில் எந்த உயர் அலுவலர் ஈடுபட்டிருந்தாலும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை" என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத துணிக் கடைகளுக்கு சீல்