ETV Bharat / state

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி - சேவூர் ராமச்சந்திரன் தொடக்கம்

திருவண்ணாமலை: முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

cmcup_sports
cmcup_sports
author img

By

Published : Feb 14, 2020, 9:10 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில், 1,350 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நேற்று கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, ஹாக்கி ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இன்று டென்னிஸ், இறகுப்பந்து, ஜூடோ, குத்துச்சண்டை , தடகளம், நீச்சல் போட்டிகள் நடைபெற உள்ளன.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்

மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ. ஒரு லட்சம், இரண்டாமிடம் ரூ. 75 ஆயிரம், மூன்றாமிடம் ரூ. 50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.

இதையும் படிங்க: ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.