சென்னை: சென்னை அருகே கொரட்டூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 39ஆவது தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (45).
இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்டரைவாக்கத்தில் சொந்தமாக தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதா (40).
இவர்களது வீட்டில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, மேல்புழுதூர் கிராமத்தைச் சார்ந்த விக்னேஷ் (27), அவரது மனைவி சத்யா (30) ஆகியோர் கடந்த ஒன்னரை ஆண்டாக தங்கியிருந்து, வீட்டு வேலைகளைப் பார்த்து வந்தனர்.
மேலும், இவர்களுடன் சத்யாவின் தங்கையான லட்சுமி (28), அவரது கணவர் பிரகாஷ் (26) ஆகியோரும் தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்துவந்தனர்.
இது குறித்து கொரட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கனகராஜ் மற்றும் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சந்திரசேகர் வீட்டில் அவர்களது ரகசிய அறையில் வைத்திருந்த டிஜிட்டல் லாக்கர் நூதன முறையில் சாதாரண கம்பியைப் பயன்படுத்தி உடைக்கப்பட்டு, அதிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் திருடியது, விக்னேஷ், அவரது மனைவி சத்யா, சத்யாவின் தங்கை லட்சுமி, அவரது கணவர் பிரகாஷ் ஆகிய 4 பேர் எனத் தெரியவந்தது.
இதையடுத்து திருவண்ணாமலை சென்ற காவலர்கள் அவர்கள் 4 பேரையும் கைது செய்து, செப்டிக் டேங்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகை, ஒரு கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருள்கள் மற்றும் திருடிய பணத்தில் வாங்கப்பட்ட இரு சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர், திருட்டில் ஈடுபட்ட இரு தம்பதியினரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:சௌக்கார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது - நன்றி தெரிவித்து நடிகர் நாசர் அறிக்கை!