ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத பேருந்து பறிமுதல் - tiruvannamalai district news

திருவண்ணாமலை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காமல், அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து பறிமுதல்செய்யப்பட்டது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை
author img

By

Published : Apr 27, 2021, 9:31 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுகாதார வட்டத்தில் சேரந்தாங்கல் கிராமம், செங்கம் பேரூராட்சி, மில்லத் நகர், ஆகிய கோவிட்-19 கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று (ஏப்ரல் 26) மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார் .

அப்போது செங்கம் சுகாதார வட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி, சேரந்தாங்கல் கிராமம் ஆகியவற்றில் 8 நபர்களுக்கும், செங்கம் பேரூராட்சி, மில்லத் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கும் கரோனா நோய் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கோணக்குட்டை கேட் அருகே மாவட்ட ஆட்சியர் சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் திருப்பத்தூருக்குச் சென்ற தனியார் பேருந்தில் அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக பேருந்தை நிறுத்தினார்.

மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் சென்றதால், அந்த வாகனத்தைப் பறிமுதல்செய்து, நடத்துநர், ஓட்டுநர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் கரோனா தொற்றல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவு மாதிரிகள் சேகரித்து பரிசோதனை மேற்கொள்ளவும், காய்ச்சல் முகாம்கள் நடத்தவும் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு: தலைகீழாகத் தொங்கியபடி முதியவர் யோகாசனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.