ETV Bharat / state

கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் - கல்லூரி மாணவர் கைது - Chengam Rumor

திருவண்ணாமலை: செங்கம் அருகே கரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பிய கல்லூரி மாணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர் கைது
கல்லூரி மாணவர் கைது
author img

By

Published : Mar 20, 2020, 7:36 AM IST

உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அண்டப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வெங்கடேசன் செங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.

நேற்று சமூக வலைதளங்களில் அண்டப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கு கரோனா வைரஸ் உள்ளதாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வந்ததை போல் தயார் செய்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

கல்லூரி மாணவர் கைது

இதனைத் தொடர்ந்து சந்திரன் செங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வெங்கடேசனை கைது செய்தனர்.

மேலும் இதேபோன்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் - கோயில்களை மூட உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.