திருவண்ணாமலை அண்ணா சாலையில் உள்ள ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் எட்டாம் பேராயராக மறைதிரு வே. சாமுவேல் கென்னடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கான நிலைப்படுத்துதல், நியமனப்பட்டயம் வழங்கும் விழா ஆற்காடு லுத்தரன் திருச்சபையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பேராயர்கள், மத போதகர்கள் ஆளும் குழு உறுப்பினர்கள், திருச்சபை அங்கத்தினர் கலந்துகொண்டனர்.
மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எட்டாவது பேராயராக பொறுப்பேற்ற சாமுவேல் கென்னடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.