திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில் உள்ள அணை சுற்றுலாத் தலமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அணையில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "செங்கம் சாத்தனூர் அணையில் கடந்த இரு தினங்களாக மீன்கள் திடீரென இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இது எங்களுக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. மீன்கள் இறப்பிற்கான காரணத்தை அரசு அலுவலர்கள் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.