திருவண்ணாமலை குமரகோயில் தெருவில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் லாரிகளில் வந்து இறங்குவதாக நகராட்சி ஆணையர் நவேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். அப்போது, லாரி மூலம் 500 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இறக்குமதி செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், குமரகோயில் தெருவைச் சேர்ந்த ஜாகீர் என்பவரது மளிகைக் கடையை திருவண்ணாமலை நகராட்சி ஊழியர்கள் ஆல்பர்ட், வினோத், கண்ணா, கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை செய்ததில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ நெகிழிப் பொருள் கைப்பற்றப்பட்டது.
தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள் வைத்திருந்ததற்காக கடை உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.