ETV Bharat / state

விவசாயி குடும்பத்தை தாக்கி திருட முயற்சி: ஏழு பேருக்க போலீஸ் வலைவீச்சு! - விவசாயி குடும்பம்

திருவண்ணாமலை: மெய்யூர் கிராமத்தில் நள்ளிரவில் விவசாயி குடும்பத்தினரை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற ஏழு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Attempt to attack
Attempt to attack
author img

By

Published : Feb 14, 2021, 2:28 PM IST

திருவண்ணாமலை அடுத்த மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (50) இவர் விவசாயம் செய்துவருகிறார். இவரது மனைவி தவமணி இவர்களுக்கு இந்து என்ற மகளும் கவியரசன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி இரவு ஸ்ரீதர் அவரது குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் வீட்டின் கதவை உடைக்கும் சத்தம் கட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர் கதவு அருகே சென்றுள்ளார். அப்போது கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்த 7 பேர் கொண்ட முகமுடி கும்பல் சரமாரியாக ஸ்ரீதரை தாக்கியுள்ளனர்.

அப்போது அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். இவர்களுடைய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் ஓடி வந்ததை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த ஸ்ரீதர் அவருடைய மனைவி, குழந்தைகளை பொதுமக்கள் மீட்டு மெய்யூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

பின்னர் இதுகுறித்து வாணாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த கும்பல் அரைகுறை ஆடை அணிந்து முகமூடி அணிந்திருந்தாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். ஸ்ரீதரை தாக்கும் போது அந்த கும்பலிருந்த ஒருவருடைய வாட்ச் அறுந்து கீழ விழுந்தது. இந்த வாட்சை கைப்பற்றி காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் - மடக்கி பிடித்த காவல்துறையினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.