நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாள்கள் தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் விழாவில் அண்ணாமலையார் ஆலயத்தில், மூன்றாம் பிரகாரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் தீபாராதணை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து ஆலயத்தின் வெளியே உள்ள 16 கால் மண்டபத்தில் வெள்ளி இந்திர விமானத்தில் அண்ணாமலையார் உள்பட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.
பின்னர் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் வெள்ளி இந்திர வாகனத்தில் வலம் வந்தனர்.
அப்போது நான்கு மாட வீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: திருப்பதியில் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம்