பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் உத்தராயன புண்ணிய கால உற்சவத்தை முன்னிட்டு இன்று (ஜன.5) அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் பராசக்தி அம்மன் சாமிகளுக்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உத்தராயன நட்சத்திரத்தில் மகரத்தில் மகர லக்கனத்தில் அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். உத்தராயன புண்ணியகால கொடியேற்றத்தை தொடர்ந்து பத்து நாள்கள் விநாயகர் அண்ணாமலை உண்ணாமுலை அம்மன் பராசக்தி அம்மன் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
இதையும் படிங்க: 'அடுத்த சவால்களுக்கு தயார்' - நம்பிக்கையில் நடராஜன்!