ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் ஆருத்ரா தரிசனம் - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜ பெருமானின் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில் ஆருத்ரா தரிசனம்
அண்ணாமலையார் கோயில் ஆருத்ரா தரிசனம்
author img

By

Published : Jan 6, 2023, 12:20 PM IST

அண்ணாமலையார் கோயில் ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (ஜன.6) சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள மாதங்களில் மார்கழி மாதத்தினை ஆன்மிக மாதம் என்று கூறுவர். இந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று (ஜன.5) இரவு கோயிலில் உள்ள 1000 கால் மண்டபத்தில் சிவகாமி சமேத நடராஜ பொருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இன்று அதிகாலை சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு அரிசி மாவு, சீயக்காய்த்தூள், மஞ்சள், பஞ்சாமிரதம், தேன், பால், பன்னீர், இளநீர், அபிஷேகத்தூள் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அண்ணாமலையாா் கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் மீது ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீப கொப்பரையிலிருந்து நெய் சேகரிக்கப்பட்டது. அதனுடன் பல்வேறு மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து தீப மை தயார் செய்யப்பட்டது. தீப மைக்கு கோயிலின் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ஆருத்ரா தரிசனமான இன்று சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு தீப மை நெற்றியில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜ பெருமான் 1,000 கால் மண்டபத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருமஞ்சன கோபுர வாயில் வழியாக கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். குறிப்பாக ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய 2 தினங்கள் மட்டும் திருமஞ்சன கோபுர வாயில் வழியாக நடராஜ பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

திருகார்த்திகை தீபத்திருவிழாவின் போது நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தீப மையானது இன்று முதல் பிரசாதமாக வழங்கப்படும். அதே போல் கோயிலுக்கு வரும் பக்தர்கள் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி தீப மை பெற்றுக்கொள்ள கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: கடல் அரிப்பு.. பாலைவனமாக மாறிய பழவேற்காடு சாலை..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.