ETV Bharat / state

14ஆம் தேதி முதல் அனைத்து காய்கறி கடைகளும் மூடப்படும் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: வருகின்ற 14ஆம் தேதி (செவ்வாய்) முதல் அனைத்து, காய்கறிகள் மற்றும் பழங்கள், தற்காலிக சந்தைகள் மூடப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

market
market
author img

By

Published : Apr 13, 2020, 11:15 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியளார்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்பட அனைவரும் இரவு, பகல் பாராமல் 24 மனி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், மருந்துகள் உட்பட அனைத்தும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகின்ற 14ஆம் தேதி (செவ்வாய்) முதல் அனைத்து காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் தற்காலிக சந்தைகள் மூடப்படுகின்றன.

இதற்கு மாற்றாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காய்கறிகள், பழங்கள் வாகனங்கள், தள்ளு வண்டிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் தங்களது வாடிக்கையாளர்களின் வீடுகளில் நேரடியாக சென்று விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், வங்கி ஏடிம்-கள், எரிவாயு முகவர்கள், இறைச்சி கடைகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படும். குறிப்பாக கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட கட்டுப்பாடுகளை பொது மக்கள், வியாபாரிகள், வணிகர்கள் தவராமல் கடைப்பிடிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களை கவுரவித்த காவல்துறை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.