திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த முடையூர் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பிரமுகரின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இதில் அதிமுக பிரமுகர்கள் கலந்து கொள்ள இருந்ததால், தேவிகாபுரம் - போளூர் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் விளம்பரப் பதாகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் தேவிகாபுரம் கிராமத்தைச்சேர்ந்த ரம்யா என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குச்சென்று கொண்டிருந்தார். அப்போது ரம்யா மீது ஃபிளெக்ஸ் பேனர் விழுந்தது. இதில் படுகாயமடைந்த ரம்யா, போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எல்லாம் முடிந்தது... அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக ஓபிஎஸ் கிடையாது... உச்ச நீதிமன்றம்...