ETV Bharat / state

"பெரிய சகாப்தத்தை கண்முன் நிறுத்திய உணர்வு" - முதல்வர் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த ஜெயம் ரவி நெகிழ்ச்சி! - tamil news

திருவண்ணாமலை காந்திநகர் புறவழிச்சாலையில் உள்ள மைதானத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை நடிகர் ஜெயம் ரவி துவக்கி வைத்தார்.

முதல்வர் புகைப்பட கண்காட்சியை நடிகர் ஜெயம் ரவி துவக்கி வைத்தார்

author img

By

Published : May 12, 2023, 9:35 AM IST

திருவண்ணாமலையில் முதல்வர் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி

திருவண்ணாமலை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திறப்பு விழாவாக நடத்தப்பட்டு பல பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரது பார்வைக்கும் வைக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மே 11-ஆம் தேதி திருவண்ணாமலை காந்திநகர் புறவழிச்சாலையில் உள்ள மைதானத்தில் 'தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாறு' குறித்த புகைப்பட கண்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் அனைத்து புகைப்படங்களையும் கண்டு ரசித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ஜெயம் ரவி, "இது போன்ற புகைப்பட கண்காட்சியை சிறப்பாக கொண்டு வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், இது போன்ற புகைப்பட கண்காட்சியை எங்கும் பார்த்ததில்லை என்றும், சினிமாவில் இருப்பது போன்று இங்கு பெரிய சகாப்தத்தை கண் முன் நிறுத்தியதாக ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக முதலமைச்சரின் சாதனைகளையும், உழைப்பையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதாக உணர்வதாகவும், தமிழக முதலமைச்சர் எம்மதமும் சம்மதம் என்ற அடிப்படையில் அனைவருடனும் எப்படி பழகுகிறாரோ, அதேபோன்று இந்த புகைப்பட கண்காட்சி அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த புகைப்பட கண்காட்சியில் தான் கலந்து கொண்டது மிகவும் பெருமையாக உள்ளதாகவும், இந்த தூய்மையான மண் திருவண்ணாமலை மண். அந்த மண்ணில் நான் வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகவும் வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது என்றும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தமிழ்நாடு, திராவிடம் என்ற கொள்கையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, இது அனைத்தும் ஒற்றுமை, நாமே நமக்குள் உள்ள ஒற்றுமையை நாம் வெளிக்காட்டுகிறோம் என்றார். பின் முதல்வரின் சிறப்பு பற்றி கேள்வி எழுப்பியதற்கு தமிழக முதலமைச்சருடைய சிறப்பு அனைவரும் அறிந்ததே என்றும், மக்கள் போற்றுகின்ற அளவிற்கு அவர் தற்போது மாற்றத்தை செய்துள்ளார், இன்னும் பல மாற்றங்களை செய்வார் என்று நானும் பொதுமக்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என பேசினார். இதனைத் தொடர்ந்து, சிறுபான்மை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழ்நாடு முதல் அமைச்சரின் புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தார்.

இதையும் படிங்க: ராவண கோட்டம் திரைப்படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு... திரையரங்கை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.