திருவண்ணாமலை மாவட்டத்தில் தலைமைக் காவலராக பணிப்புரிந்து வருபவர் ஸ்ரீபால்(42). இவரது மனைவி ஞானசவுந்தரிக்கும், திருவண்ணாமலை கிளிப்பட்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் சிவக்குமார் என்பவருக்கும் கடந்த சில வருடமாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தெரிந்து கொண்ட காவலர் ஸ்ரீபால், சிவக்குமாரிடம் அடிக்கடி தகராறில் ஈடுப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இது தொடர்பாக ஸ்ரீபால், திருவண்ணாமலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, ஸ்ரீபாலையும், சிவக்குமாரையும் காவல் துறையினர் சமாதானம் செய்துவைத்துள்ளனர்.
இருப்பினும், ஸ்ரீபாலின் மனைவி ஞானசுந்தரிக்கும், சிவக்குமாருக்கும் தொடர்ந்து பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஸ்ரீபால் சிவக்குமாரின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, ஸ்ரீபால் தனது கையில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் மீது ஊற்றியுள்ளார். இதில் விஏஒ சிவக்குமாருக்கு முகம் மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஆசிட் வீசிய போது ஸ்ரீபாலின் உடலிலும் ஆசிட் பட்டதால் அவரது முகம் மற்றும் தலை பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிட் வீசிய மாணவன் உட்பட 27 பேர் குண்டர் சட்டத்தில் கைது! கடலூரில் அதிரடி!