ETV Bharat / state

என்னது கருணாநிதி சிலையை திறந்தது இந்திரா காந்தியா? அதிர்ச்சி கிளப்பிய எ.வ.வேலு - சோனியா காந்தி

திருவண்ணாமலை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்தது இந்திரா காந்தி என கூறிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ வேலு, பின் சுதாரித்துக்கொண்டு சோனியாகாந்தி என்று தெரிவித்தார்.

எ.வ வேலு
author img

By

Published : Mar 28, 2019, 7:55 AM IST

ஆரணி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் அறிமுகக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது எ.வ வேலு பேசுகையில், “2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது இருந்த அனைத்து கூட்டணி கட்சிகளும் தற்போது திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். எனவே இந்த முறையும் 40க்கு 40 என்று வெற்றி பெறுவோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை கதாநாயகன், கதாநாயகி ஒன்றிணைந்ததுபோல் இருப்பதாகப் பத்திரிகைகளில் பாராட்டி வருகின்றனர். கருணாநிதியின் சிலையைத் திறப்பது என்னுடைய தந்தையின் சிலையை திறப்பதுபோன்ற உணர்வு தருகிறது, மிகுந்த பெருமையை தருகிறது என்று இந்திரா காந்தி கூறினார்” என வேலு பேசினார். அதன்பின் சுதாரித்துக்கொண்டு சோனியா காந்தி என்று தெரிவித்தார். அவரது இந்த பேச்சை சமூக வலைதளவாசிகள் கிண்டல் செய்துவருகின்றனர்.

Intro:ஆரணி பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் அவர்களின் அறிமுக கூட்டம் ஆரணியில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரும் திரளான தொண்டர்கள் குவிந்தனர்.

Body:ஆரணி பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் அவர்களின் அறிமுக கூட்டம் ஆரணியில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரும் திரளான தொண்டர்கள் குவிந்தனர். வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விஷ்ணுபிரசாத் அவர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார் என்று தெரிவித்தனர். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ வேலு கூறியதாவது , 2004 இல் நடைபெற்ற தேர்தலின் போது இருந்த அனைத்து கூட்டணி கட்சிகளும் தற்போது திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். எனவே இந்த முறையும் 40க்கு 40 என்று வெற்றி பெறுவோம். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்களே அது போல திமுக தலைவர் ஸ்டாலின் தயாரித்துள்ள தேர்தல் அறிக்கை கதாநாயகன் கதாநாயகி ஒன்றிணைந்தது போல் இருப்பதாக பத்திரிகைகளில் பாராட்டி வருகின்றனர். கலைஞரின் சிலையைத் திறப்பது என்னுடைய தந்தையின் சிலையை திறப்பது போன்ற உணர்வு தருவதாகவும் , எனக்கு மிகுந்த பெருமையை தரும் என்று அன்னை இந்திரா காந்தி கூறினார் என்று கூறிய எ.வ வேலு பின்னர் சுதாரித்துக் கொண்டு அன்னை சோனியா காந்தி என்று தெரிவித்தார். ஐந்தாண்டு காலம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த செஞ்சி சேவல் ஏழுமலை இந்த ஆரணி தொகுதிக்காக ஒரு புட்டுகூடை மண்ணை அள்ளிப்போட்டு இருப்பாரா? மத்திய அரசின் இந்த திட்டத்தை நான் முடித்திருக்கிறேன் என்று எதையாவது அவரால் குறிப்பிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். ஆரணி பாராளுமன்ற தொகுதியில் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றால் மத்திய அரசின் திட்டங்களை அனைத்தையும் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். திமுகவின் தொண்டர்கள் நீங்கள் வெற்றி பெறும் வரை உழைக்கக் கூடியவர்கள் , அனைவரும் உழைத்து கை சின்னத்தை வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு முன்னாள் அமைச்சர் எ.வ வேலு கூறினார்

Conclusion:ஆரணி பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் அவர்களின் அறிமுக கூட்டம் ஆரணியில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரும் திரளான தொண்டர்கள் குவிந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.